Tuesday 17 June 2014

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி
டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி.

அதாவது , குறிப்பிட்ட இணையதளங்களில் தேட வேண்டும் என்றால் அந்த தளத்திற்கு சென்று தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே , டக் டக் கோவில் இருந்தே அதில் தேடிக்கொள்ளலாம். தேடலுக்கான குறிச்சொல்லுடன் குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் பெயரையும் சேர்த்து டைப் செய்தால் , நமது தேடலுக்கான அந்த இணையதள முடிவுகள் டக் டக் கோ பக்கத்திலேயே வந்து நிற்கும். இந்த வசதியை ஐபேங்! என்று டக் டக் கோ குறிப்பிடுகிறது. இதற்கும் ஒரு உதாரணம் பார்க்கலாம். தொழில்நுட்ப வலைப்பதிவான மேக்யூஸ் ஆப் ( இந்த வசதி பற்றி அறிமுகம் செய்த தளம்) தளத்தில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ( நடுநிலை!) பற்றிய கட்டுரைகளை தேட விரும்பினால், டக் டக் கோவில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு என டைப் செய்து கூடவே மேக்யூஸ் ஆப்! என குறிப்பிட்டால் போதும், இந்த தளத்தில் உள்ள தொடர்புடைய கட்டுரைகளை எல்லாம் பார்க்கலாம்.

இது போல நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பெயரை அடைப்புக்குறியிட்டு தேடும் வசதி இருக்கிறது. இணையதளங்கள் மட்டும் அல்ல, பல பொதுவான குறிச்சொற்களையும் இவ்வாறு தேடலாம். எடுத்துக்காட்டாக புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் குறிச்சொல்லுடன் இமேஜஸ் எனும் சொல்லை அடைப்புக்குறியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வசதிக்கான விரிவான பட்டியலையும் டக் டக் கோ கொடுத்துள்ளது:

https://duckduckgo.com/bang.html#menu

Google Maps Updates Include Routes To Avoid Crashes

 Google announced new Google Maps updates, including tailored maps and suggesting routes that reduce the likelihood of a crash, during the  ...