Tuesday 17 June 2014

எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள கணினியை பயன்படுத்துபவரா நீங்கள்?

எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள கணினியை பயன்படுத்துபவரா நீங்கள்?


நீங்கள் கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்க ள், வாடகைக்கு கம்ப்யூட் டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப் யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப்போ ல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத் தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப் பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக்கொள்ள வேண் டாம். அந்தக் கம்ப்யூட்டரி ல் ஸ்பைவேர் அல்லது அட் வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலா ம். இவை திருட்டுத்தனமா க உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பண ம் பறிபோகும் வாய்ப்பு ண்டு.

2. உங்கள் நிதிசார்ந்த கணக்கு வழக்குகள் அல் லது வருமான வரி சம் பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அது போல பொதுக்கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்ல து நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப் பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசை க்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூல ம் எந்தப் பொருளையும் வாங்க க் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4.பொதுக் கம்ப்யூட்டர்களி ல் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன் டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரி ல் உள்ள பைல்களை அழி த்துவிடுங்கள். இன்டர்நெ ட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்து விடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்னவேலையும் பாது காப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய் திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரி யில் இருக்கும் பைல்களை அழித்து விடும்

Google Maps Updates Include Routes To Avoid Crashes

 Google announced new Google Maps updates, including tailored maps and suggesting routes that reduce the likelihood of a crash, during the  ...