Monday, 29 September 2014

உங்கள் Android சாதனம் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் அதனை அறிந்துகொள்ள உதவுகின்றது Anti Theft எனும் Android சாதனத்துக்கான மென்பொருள்.

உங்கள் Android சாதனம் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் அதனை அறிந்துகொள்ள உதவுகின்றது Anti Theft எனும் Android சாதனத்துக்கான மென்பொருள்.

உங்கள் Android சாதனத்தை குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்துவிட்டு இந்த மென்பொருளை இயக்கிவிட்டால் போதும்.

இனி உங்கள் Android சாதனம் அந்த இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் ஒரு பெரிய ஒலியை ஏற்படுத்தும் இனி அதனை நகர்த்தியவர் யார் என்று மிக இலகுவாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு வைப்பதன் மூலம் குறிப்பிட்ட Android சாதனம் நகர்த்தப்படும் போது அந்த சாதனத்தின் முன்பக்க Camera மூலம் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டு அதனை நீங்கள் உள்ளிட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உடானடியாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர உங்கள் Android சாதனத்துடன் Charger இணைக்கப்பட்டிருக்கும் போது அது அகற்றப்பட்டால் மேற்குறிப்பிட்டது போன்ற ஒலியை ஏற்படுத்தி உங்களுக்கு அறியத்தரும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. (இந்த வசதியை நீங்கள் விரும்பினால் Settings பகுதியினூடாக செயற்படுத்திக்கொள்ளலாம்)

இந்த மென்பொருளை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

=====> http://j.mp/Anti_Theft_Alarm_By_Tamilinfotech
.

Wednesday, 18 June 2014

Sandisk நிறுவனம் வெளியிட்ட உலகின் அதிக Capacity கொண்ட Micro SD Memory Card

Sandisk நிறுவனம் வெளியிட்ட உலகின் அதிக Capacity கொண்ட Micro SD Memory Card

ஆம் வெகு நாட்களுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்ற இந்த அதிக வகை Storage Device இனி இந்தியாவிலும் கிடைக்கும்
128Gb சேமிப்பு திறனை அடக்கி வைத்திருக்கும் இதில்
தொடர்ந்து 16 மணி நேரம் ஓடக்கூடிய HD Videoக்கள் மற்றும் 7,500 பாடல்கள் அதனுடன் 3,200 போட்டோக்கள் 125 சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில் பதிந்து வைத்து இயக்கலாமாம் !
அது மட்டும் இல்லாமல்
வெப்பம் மற்றும் தண்ணீரில் பாதிப்படையாத வாறு இதனை உருவாக்கியுள்ளார்களாம் இதனுடைய விலை 10,000 ரூபாயாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன் ஆனால் Sandisk எப்பவுமே குறைந்த விலையில் தான் memory cardகளை விற்கும் என இதனுடைய உண்மையான விலையை கண்டவுடன்தான் எனக்கே புரிந்தது
இதனுடைய இந்திய விலை ₹9,999 ரூபாய்தானாம்
(விலை ரெம்ப கம்மியாதா இருக்கு எல்லாரும் வேகமா போய் வாங்கிட்டு வாங்க)

'நமக்கு இந்த 8Gbயே போதும்டா சாமீ'

Tuesday, 17 June 2014

அதிவேகம், பாதுகாப்பு கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் சாதனம்

அதிவேகம், பாதுகாப்பு கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் சாதனம்
தற்காலத்தில் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் மூலமானதரவுசேமிப்பு சேவை பிரபல்யமடைந்து வருகின்றது.
இச்சேவையினை Microsoft, Google, Dropbox போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

எனினும் இவற்றினால் வழங்கப்படும் சேவையை விடவும் 20 மடங்கு வேகம் அதிகம் உடையதும், பாதுகாப்பு உடையதுமான ஹோம் நெட்வேர்க் கிளவுட் ஸ்டோரேஜினை பெற்றுக்கொள்ளும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

Sherly எனும் இச்சாதனம் தற்போது மேம்படுத்தல் தேவைகளுக்கான நிதியினை பெறும்பொருட்டு Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெகுவிரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினியில் அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க

கணினியில் அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க
நாம் சில நேரங்களில் கணிணியில் சந்திக்கும் ஒரு பிரச்சனை சில கோப்புகளை அழிக்க(Delete) நாம் விரும்பி நாம் அழித்தால் அழியாமல் நமக்கு எரிச்சலை உண்டு பண்ணும. வேறொரு செயல் அந்த கோப்பை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக நமக்கு பிழை செய்தி வரும்.அதாவது கீழ்க்கண்டவாறு தோன்றும்
"Cannot Delete File: It is being used by another person or program"

இத்தகைய கோப்புகளை அழிக்க Unlocker என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின் அழிக்க முடியாத கோப்பின் மீது Right கிளிக் செய்யவும்.அதில் Unlocker என்பதை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்தால் அந்த கோப்பை தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் செயல்களை காட்டும்.

அதில் Unlock என்ற பட்டன் மூலம் அந்த செயல்களை நிறுத்தி அந்த கோப்பை அளிக்கலாம்.இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்.

http://www.brothersoft.com/download-unlocker-208761.html

எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள கணினியை பயன்படுத்துபவரா நீங்கள்?

எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள கணினியை பயன்படுத்துபவரா நீங்கள்?


நீங்கள் கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்க ள், வாடகைக்கு கம்ப்யூட் டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப் யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப்போ ல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத் தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப் பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக்கொள்ள வேண் டாம். அந்தக் கம்ப்யூட்டரி ல் ஸ்பைவேர் அல்லது அட் வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலா ம். இவை திருட்டுத்தனமா க உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பண ம் பறிபோகும் வாய்ப்பு ண்டு.

2. உங்கள் நிதிசார்ந்த கணக்கு வழக்குகள் அல் லது வருமான வரி சம் பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அது போல பொதுக்கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்ல து நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப் பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசை க்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூல ம் எந்தப் பொருளையும் வாங்க க் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4.பொதுக் கம்ப்யூட்டர்களி ல் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன் டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரி ல் உள்ள பைல்களை அழி த்துவிடுங்கள். இன்டர்நெ ட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்து விடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்னவேலையும் பாது காப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய் திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரி யில் இருக்கும் பைல்களை அழித்து விடும்

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி
டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி.

அதாவது , குறிப்பிட்ட இணையதளங்களில் தேட வேண்டும் என்றால் அந்த தளத்திற்கு சென்று தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே , டக் டக் கோவில் இருந்தே அதில் தேடிக்கொள்ளலாம். தேடலுக்கான குறிச்சொல்லுடன் குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் பெயரையும் சேர்த்து டைப் செய்தால் , நமது தேடலுக்கான அந்த இணையதள முடிவுகள் டக் டக் கோ பக்கத்திலேயே வந்து நிற்கும். இந்த வசதியை ஐபேங்! என்று டக் டக் கோ குறிப்பிடுகிறது. இதற்கும் ஒரு உதாரணம் பார்க்கலாம். தொழில்நுட்ப வலைப்பதிவான மேக்யூஸ் ஆப் ( இந்த வசதி பற்றி அறிமுகம் செய்த தளம்) தளத்தில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ( நடுநிலை!) பற்றிய கட்டுரைகளை தேட விரும்பினால், டக் டக் கோவில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு என டைப் செய்து கூடவே மேக்யூஸ் ஆப்! என குறிப்பிட்டால் போதும், இந்த தளத்தில் உள்ள தொடர்புடைய கட்டுரைகளை எல்லாம் பார்க்கலாம்.

இது போல நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பெயரை அடைப்புக்குறியிட்டு தேடும் வசதி இருக்கிறது. இணையதளங்கள் மட்டும் அல்ல, பல பொதுவான குறிச்சொற்களையும் இவ்வாறு தேடலாம். எடுத்துக்காட்டாக புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் குறிச்சொல்லுடன் இமேஜஸ் எனும் சொல்லை அடைப்புக்குறியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வசதிக்கான விரிவான பட்டியலையும் டக் டக் கோ கொடுத்துள்ளது:

https://duckduckgo.com/bang.html#menu

தெரிந்து கொள்வோம்:கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

தெரிந்து கொள்வோம்:
கணனியில் இருந்து வரும் பீப் ஒலி?

கணனியில் ஒலிக்கும் பீப் ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
டைமரில் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
ப்ராசசரில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.

6 முறை பீப் சத்தம்:
கீ போர்டு, கீ போர்டு கண்ட்ரோலில் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
கேச் மெம்மரி சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
மெமரி தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.

இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

Google Maps Updates Include Routes To Avoid Crashes

 Google announced new Google Maps updates, including tailored maps and suggesting routes that reduce the likelihood of a crash, during the  ...